உலகமே திரும்பி பார்க்க வைக்கும் டோக்கியோ ஒலிம்பிக் பதக்கம் செய்முறை!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு உலகப் புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டி நடைபெறும்போது அதற்கான பதக்கங்களை செய்வதில் அந்தக் குழு அதீத அக்கறை எடுத்துக் கொள்ளும். இதற்காக விலையுயர்ந்த உலோகங்கள் பயன்படுத்தப் படலாம். ஏன், உலகின் பல மூலைகளில் இருந்தும் உலோகங்களை சேகரித்து அதில் பதக்கங்களை செய்து வீரர்களுக்கு கொடுக்கலாம். ஆனால் தற்போது ஜப்பான் செய்திருக்கும் காரியம் சமூக ஆர்வலர்களின் பாராட்டுகளை குவித்து வருகிறது.
முயற்சிக்கும் உழைப்புக்கும் பெயர்ப்போன ஜப்பான் பல இழப்புகளைத் தாண்டி தற்போது பொருளாதாரத்தில் வலிமை பெற்றிருக்கிறது. அந்த நாட்டில் நடைபெற்று வரும் 2021 ஒலிம்பிக் போட்டிக்காக வழங்கப்படும் பதக்கங்களிலும் தனது தனிச்சிறப்பை ஜப்பான் மக்கள் காட்டியிருக்கின்றனர்.
ஜப்பான் இந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக எந்தச் சுரங்கத்தில் இருந்தும் உலோகங்களை வாங்காமல் பொதுமக்களிடம் இருந்து பொருட்களைத் திரட்டி அதை வைத்து ஒலிம்பிக் பதக்கங்களைத் தயாரித்து இருக்கிறது. இதனால் ஜப்பான் நாட்டின் ஒவ்வொரு சாமானிய மனிதனும் இந்த டோக்கியோ ஒலிம்பிக் பதக்கத்தில் தன்னுடைய பங்களிப்பை செய்திருக்கிறார். இதற்காகத்தான் உலக நாடுகள் ஜப்பானை புகழ்ந்து வருகின்றன.
இதற்காக “டோக்கியோ பதக்கம்” என்ற திட்டத்தை கடந்த 2017-2019 வரை செயல்படுத்தி இருக்கிறது ஜப்பான். 1,741 பெரு நகரங்கள் மற்றும் 1,621 நகரங்களில் இருந்து கிட்டத்தட்ட 78,985 டன் எலக்ட்ரானிக் சாதனங்கள் சேகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பொருட்களில் பெரும்பாலானவை போன்கள் மற்றும் எலக்ட்ரிக் சாமான்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இதில் இருந்து 32 கிலோ தங்கம், 3,500 கிலோ வெள்ளி, 2,200 கிலோ வெள்ளி போன்றவை பிரித்து எடுக்கப்பட்டு அவற்றைக் கொண்டு 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கான பதக்கங்கள் செய்யப்பட்டு தற்போது போட்டியில் வென்றவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout