மரக்கூண்டில் இரண்டு குழந்தைகளை அடைத்து வைத்த இரக்கமில்லா பெற்றோர் கைது!

  • IndiaGlitz, [Wednesday,April 24 2019]

பெற்ற குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பாக வளர்க்கும் பெற்றோர்கள் மத்தியில் ஒருசில பெற்றோர்கள் சைக்கோத்தனமாக பெற்ற குழந்தைகளை கொடுமைப்படுத்தும் செய்திகள் தற்போது அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கின்றது

இந்த நிலையில் கலிபோர்னியாவை சேர்ந்த ரமோன் ஜெண்டிஜாஸ் மற்றும் மெர்க்காடீஸ் வில்லியம்ஸ் தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளை ஒரு மரக்கூண்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதற்காகவே பிரத்யேகமாக மரத்தாலான ஒரு கூண்டை தயார் செய்து அதை போல்ட்-நட் போட்டு டைட் செய்து அதில் இரண்டு குழந்தைகளையும் அடுக்கடுக்காக சிறை வைத்துள்ளனர். இவ்வளவிற்கும் இரண்டு குழந்தைகளுக்கும் இரண்டு வயதுக்கும் குறைவாகவே இருக்கும் என்பது கொடுமையிலும் கொடுமை

இந்த நிலையில் அந்த வீட்டில் சந்தேகத்துக்கு இடமான சத்தம் வந்ததால் உள்ளே நுழைந்து சோதனை செய்த போலீசார், குழந்தைகள் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து குழந்தைகளை கொடுமைப்படுத்தும் சட்டப்பிரிவின்படி தம்பதிகளை கைது செய்த போலீசார், அந்த இரண்டு குழந்தைகளையும் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

More News

ஓய்வு பெற்று 6 வருடம் ஆகியும் குறையாத மதிப்பு: அதுதான் சச்சின்!

கிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தாரா? அறிக்கை கேட்கும் தேர்தல் அதிகாரி

கடந்த 18ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்றபோது நடிகர் ஸ்ரீகாந்த் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்க முதலில் அனுமதிக்கப்படவில்லை.

விபத்தில் காயமடைந்த ஊழியரை நேரில் சென்று நலம் விசாரித்த விஜய்!

நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் எந்த அளவுக்கு நெருக்கமாக இருந்து வருகிறார் என்பது பல சம்பவங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

டிக் டாக் தடை சரியா? நடிகை கஸ்தூரி கருத்து

டிக்டாக் செயலியை தடை செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கை மதுரை உயர் நீதிமன்றக் கிளை வரும் ஏப்ரல் 24க்குள் தீர்ப்பளித்து முடிக்க வேண்டும்

முன்னாள் முதல்வர் மகன் மர்ம மரணம்: மனைவியே கொலை செய்தாரா?

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் சேகர் என்பவரை அவரது மனைவியே கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.