16 வயதில் உலகப்புகழ் பெற்ற நடிகை மர்ம மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
16 வயதில் உலகப் புகழ் பெற்ற நடிகை ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த பல ஆண்டுகளாக நடந்து வரும் தொலைக்காட்சி தொடரான என்ற "டாட்லர்ஸ் & டியரஸ்" நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை கைலியா போஸி. 16 வயதான இவர் உலகப் புகழ் பெற்று உள்ளார் என்பதும் இவருக்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வாஷிங்டனில் உள்ள தனது வீட்டில் கைலியா போஸி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். கைலியா போஸி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டாலும் அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது .
தனது மகளின் மரணம் குறித்து கைலியா போஸின் தாயார் கூறியபோது, ‘என் மகளின் மரணம் குறித்துப் பேசுவதற்கு எனக்கு வார்த்தைகளே இல்லை. ஒரு அழகான பெண் குழந்தை எங்களை விட்டுப் போய்விட்டது. மகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு ஆறுதல் எதுவும் இல்லை என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். கைலியா போஸி திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலகம் முழுவதிலுமிருந்து அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com