இன்று விஷால்-அனிஷா நிச்சயதார்த்தம்: ஐதராபாத்தில் குவியும் திரையுலகினர்

  • IndiaGlitz, [Saturday,March 16 2019]

நடிகர் விஷால்-அனிஷா திருமணம் குறித்த செய்திகள் கடந்த ஜனவரி மாதம் முதல் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இன்று இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெறவுள்ள இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏற்கனவே இருவீட்டார்களும், உறவினர்களும் அந்த ஓட்டலில் தங்கியுள்ளனர். மேலும் சுந்தர் சி, குஷ்பு, நந்தா, ரமணா, ஸ்ரீமான், பசுபதி உள்ளிட்ட பிரபலங்கள் நேற்றே ஐதராபாத் சென்றுவிட்டனர். ஆர்யா, சாயிஷா உள்பட விஷாலுக்கு நெருக்கமான திரையுலக பிரபலங்கள் இன்று செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பின் திருமண தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இருவீட்டார்களும் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.