இன்று சூர்யா ரசிகர்கள் தயாராக இருங்க.. மாலையில் ஒரு செம்ம அப்டேட்..!

  • IndiaGlitz, [Wednesday,May 29 2024]

நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு செம அப்டேட் வெளியாக இருப்பதை அடுத்து அவர்களுக்கு இன்று கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான் தீவில் நடைபெற இருப்பதாகவும் ஜூன் முதல் வாரம் நடைபெற இருக்கும் இந்த படப்பிடிப்புக்காக இன்னும் ஓரிரு நாளில் சூர்யா உள்பட படக்குழுவினர் அந்தமான் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு ’சூர்யா 44’ படத்தின் சூப்பர் அப்டேட் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனேகமாக இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் சூர்யா ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

2டி எண்டர்டெயிமெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து அறிவிப்பு இன்று வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

'அண்ணா நோ கமெண்ட்ஸ்'..  பத்திரிகையாளர் கேள்விக்கு ரஜினிகாந்த் கூறிய பதில்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ஆன்மீக பயணம் மேற்கொள்வதை அடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அரசியல் குறித்த கேள்விக்கு 'அண்ணா நோ கமெண்ட்ஸ்' என்று பதில் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி

இலங்கையில் நடைபெற்ற விளையாட்டு போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து..!

இலங்கை, கொழும்புவில் இம்மாதம் அதாவது மே 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற்ற 10 வது Annual Master Athletic Championship - SriLanka 2024 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு

'தக்லைஃப்' படத்தில் மாஸ் குத்துப்பாட்டா? யார் யார் ஆடுகிறார்கள்?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது சென்னையில் இந்த படத்தின்

'சாமானியன்' ரிலீசுக்கு பின்னர் ரூட்டை மாற்றிய ராமராஜன்.. பெரிய நடிகர்கள் சம்மதிப்பார்களா?

நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜன் நடித்த 'சாமானியன்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்று கூறப்படுகிறது.

சர்வதேச பிரச்சினைக்காக குரல் கொடுத்த த்ரிஷா - சமந்தா.. வேறு யாரெல்லாம் குரல் கொடுத்துருக்காங்க..!

உள்ளூர் பிரச்சனைகளுக்கு மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் சர்வதேச பிரச்சனைகளுக்கும் அவ்வப்போது குரல் கொடுத்து வரும் நிலையில் தற்போது இஸ்ரேல்  - பாலஸ்தீனம்