இன்று ஸ்டாலின் தினம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் ரத யாத்திரை நடந்தபோது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அதனை கடுமையாக எதிர்த்தார். அவருடைய எதிர்ப்புக்கு பதிலடி கொடுத்த இந்து ஆதரவாளர்கள், ஸ்டாலினுக்கு தைரியமிருந்தால் இந்து மக்களின் வாக்குகள் தேவையில்லை என்று கூறட்டும் என்று சவால் விடுத்தனர். இவ்வாறு சவால் விடுத்தவர்களில் ஒருவர் நடிகர் எஸ்.வி.சேகரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் 'கோவிலுக்கு செல்லும் யாரும் திமுகவுக்கு வாக்களிக்க தேவையில்லை. அப்படி கோவிலுக்கு செல்வோர்கள் வாக்களித்து தான் வெற்றி பெற வேண்டும் என்றால் அப்படிப்பட்ட வெற்றி தேவையில்லை' என்று கூறியதாக செய்திகள் பரவியது. பின்னர்தான் இது ஸ்டாலின் பெயரால் தொடங்கப்பட்ட போலி டுவிட்டர் அகக்வுண்ட் என்றும் யாரோ மர்ம நபர்கள் அவரது பெயரில் போலி அக்கவுண்ட் ஆரம்பித்து விஷமத்தனமான டுவீட்டை பதிவு செய்துள்ளதும் தெரிய வந்தது
இதுகுறித்து ஸ்டாலின் கவனத்திற்கு வந்ததும் அவரது தரப்பில் இருந்து உடனடியாக சென்னை போலீஸ் கமிஷனருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: சமீப காலங்களில் ஒரு சில சமூக விரோதிகள் என்னுடைய டுவிட்டர் பக்கம் போல ஒரு போலி கணக்கை உருவாக்கி என்னுடைய டுவிட்டரில் நான் சொல்லாத கருத்துகளை நான் சொன்னது போலவும், தமிழ்ச் சமூகத்தில் பிரிவினையை உண்டாக்கும் வகையிலும், ஒரு போலி பதிவை உருவாக்கி அதனை வாட்ஸ்-அப், முகநூல் மற்றும் பிற சமூக வலை தளங்களிலும் பதிவிட்டு வருகிறார்கள்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும், என் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் எனக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், திராவிட முன்னேற்ற கழகத்தின் மாண்பினை குலைத்திடும் வகையிலும், சமூக அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் தீய எண்ணத்துடனும் இது போன்ற விஷமச் செயலை செய்து வருகிறார்கள். இந்த செயல் தண்டனைக்குரிய குற்றமாகும். இது தொடர்பாக உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் காரணமாக சமுக வலைத்தளங்களில் ஸ்டாலின் பெயர் டிரெண்டில் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி ஸ்டாலின் ஒரு புத்தக விழா நிகழ்ச்சியில் பழமொழியை மாற்றி கூறியதும் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. எனவே இன்று காலை முதல் ஸ்டாலின் பெயர் சமூக வலைத்தளங்களில் விடாமல் டிரெண்ட் ஆகி வருவதால் இன்றைய தினத்தை ஸ்டாலின் தினம் என்றே கூறலாம் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout