இன்று ஸ்டாலின் தினம்

  • IndiaGlitz, [Friday,March 23 2018]

சமீபத்தில் ரத யாத்திரை நடந்தபோது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அதனை கடுமையாக எதிர்த்தார். அவருடைய எதிர்ப்புக்கு பதிலடி கொடுத்த இந்து ஆதரவாளர்கள், ஸ்டாலினுக்கு தைரியமிருந்தால் இந்து மக்களின் வாக்குகள் தேவையில்லை என்று கூறட்டும் என்று சவால் விடுத்தனர். இவ்வாறு சவால் விடுத்தவர்களில் ஒருவர் நடிகர் எஸ்.வி.சேகரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில்  ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் 'கோவிலுக்கு செல்லும் யாரும் திமுகவுக்கு வாக்களிக்க தேவையில்லை. அப்படி கோவிலுக்கு செல்வோர்கள் வாக்களித்து தான் வெற்றி பெற வேண்டும் என்றால் அப்படிப்பட்ட வெற்றி தேவையில்லை' என்று கூறியதாக செய்திகள் பரவியது. பின்னர்தான் இது ஸ்டாலின் பெயரால் தொடங்கப்பட்ட போலி டுவிட்டர் அகக்வுண்ட் என்றும் யாரோ மர்ம நபர்கள் அவரது பெயரில் போலி அக்கவுண்ட் ஆரம்பித்து விஷமத்தனமான டுவீட்டை பதிவு செய்துள்ளதும் தெரிய வந்தது

இதுகுறித்து ஸ்டாலின் கவனத்திற்கு வந்ததும் அவரது தரப்பில் இருந்து உடனடியாக சென்னை போலீஸ் கமிஷனருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: சமீப காலங்களில் ஒரு சில சமூக விரோதிகள் என்னுடைய டுவிட்டர் பக்கம் போல ஒரு போலி கணக்கை உருவாக்கி என்னுடைய டுவிட்டரில் நான் சொல்லாத கருத்துகளை நான் சொன்னது போலவும், தமிழ்ச் சமூகத்தில் பிரிவினையை உண்டாக்கும் வகையிலும், ஒரு போலி பதிவை உருவாக்கி அதனை வாட்ஸ்-அப், முகநூல் மற்றும் பிற சமூக வலை தளங்களிலும் பதிவிட்டு வருகிறார்கள்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும், என் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் எனக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், திராவிட முன்னேற்ற கழகத்தின் மாண்பினை குலைத்திடும் வகையிலும், சமூக அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் தீய எண்ணத்துடனும் இது போன்ற விஷமச் செயலை செய்து வருகிறார்கள். இந்த செயல் தண்டனைக்குரிய குற்றமாகும். இது தொடர்பாக உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த புகார் காரணமாக சமுக வலைத்தளங்களில் ஸ்டாலின் பெயர் டிரெண்டில் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி ஸ்டாலின் ஒரு புத்தக விழா நிகழ்ச்சியில் பழமொழியை மாற்றி கூறியதும் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. எனவே இன்று காலை முதல் ஸ்டாலின் பெயர் சமூக வலைத்தளங்களில் விடாமல் டிரெண்ட் ஆகி வருவதால் இன்றைய தினத்தை ஸ்டாலின் தினம் என்றே கூறலாம் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

More News

ஸ்டாலின் பழமொழி: குசும்பர்கள் ஆன நெட்டிசன்கள்

கருணாநிதி பேசிய ஆயிரக்கணக்கான மேடைகளில் ஒரு பிழையும் இன்றி தெள்ளத்தெளிவாக பேசும் வழக்கத்தை உடையவர். அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் அவர் பேசும் தமிழ் மொழியில் யாரும் குற்றம் காண முடியாது.

அன்பை வெளிப்படுத்த ஐதராபாத் பறந்து சென்ற சிம்பு

நடிகர் சிம்பு அவ்வப்போது கோபப்படும் நபராக இருந்தாலும் அன்பை அதிகமாக வெளிக்காட்டுவதிலும் அவரை போல் யாருக்கும் இருக்க முடியாது என்பது அவரிடம் நெருங்கி பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்

சிம்புவின் புதிய நண்பராக மாறிய விஜய்சேதுபதி

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மாதவன் சென்றது ஏன்? தீபா அதிர்ச்சி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவருடைய அண்ணன் மகள் தீபா ஒரு கட்சியையும், அவரது கணவர் மாதவன் ஒரு கட்சியையும் தொடங்கியுள்ளனர். இருவருமே அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

4000 பேர் சுற்றி நின்று கைதட்டிய காலா வசனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய ஹிட்டாகிவிட்டதால்