இன்று தொடங்கியது 'சிக்கந்தர்' படப்பிடிப்பு.. முதல் நாளே இப்படி ஒரு காட்சியா? வேற லெவல் முருகதாஸ்..!

  • IndiaGlitz, [Tuesday,June 18 2024]

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் ’சிக்கந்தர்’ என்ற படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சல்மான்கான் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சத்யராஜ் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலேயே சில அதிரடி ஆக்சன் காட்சிகள் குறிப்பாக ஃபிளைட் ஆக்சன் காட்சிகள் குறித்த படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்தது என்றும் அது மட்டும் இன்றி எமோஷனல் மற்றும் ஒரு வலிமையான சமூக செய்தியை சொல்லும் படமாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு ரம்ஜான் திருநாளில் வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கும் நிலையில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கி அடுத்தடுத்து விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’எஸ்கே 23’ என்ற படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் நிலையில் 'சிக்கந்தர்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடித்தவுடன் அவர் ’எஸ்கே 23’ படப்பிடிப்புக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

அரவிந்த்சாமிக்கு நன்றி சொன்ன சூர்யா.. காரணம் இதுதான்.. புதிய போஸ்டர் ரிலீஸ்..!

நடிகர் அரவிந்த்சாமி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து புதிய போஸ்டர்

தேர்தலில் போட்டியும் இல்லை.. யாருக்கும் ஆதரவும் இல்லை.. தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு..!

ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடவில்லை என்றும் அதேபோல் யாருக்கும் ஆதரவு இல்லை

தளபதி விஜய் ரசிகர்களா நீங்கள்? நம்ம ராகா ஆஃப்-ல விஜயின் பாடல்களை கேளுங்க, பிளேலிஸ்ட் கிரேட் பண்ணி, பிரண்ட்ஸ் & ஃபேமிலிக்கு ஷேர் பண்ணி Vibe பண்ணுங்க!

வருகிற ஜூன் 22ஆம் தேதி நம்ம தலைவர் விஜய் பிறந்த நாளில் உங்களுக்கு பிடித்தமான பாடல்களை கேட்டு மகிழ இப்போதே டவுன்லோட் செய்யுங்க நம்ம  RAAGA  App...

'புஷ்பா 2' படத்தின் புதிய ரிலீஸ் தேதி.. உற்சாகத்தில் பா ரஞ்சித்..!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2'  திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும்

'சூர்யா 44' பட ஹீரோயினுக்கு இத்தனை கோடி சம்பளமா? நயனை தொட்டு விடுவாரோ?

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 44 'படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்து வரும் நடிகை பூஜா