close
Choose your channels

இன்று தொடங்கியது 'சிக்கந்தர்' படப்பிடிப்பு.. முதல் நாளே இப்படி ஒரு காட்சியா? வேற லெவல் முருகதாஸ்..!

Tuesday, June 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் ’சிக்கந்தர்’ என்ற படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சல்மான்கான் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சத்யராஜ் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலேயே சில அதிரடி ஆக்சன் காட்சிகள் குறிப்பாக ஃபிளைட் ஆக்சன் காட்சிகள் குறித்த படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்தது என்றும் அது மட்டும் இன்றி எமோஷனல் மற்றும் ஒரு வலிமையான சமூக செய்தியை சொல்லும் படமாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு ரம்ஜான் திருநாளில் வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கும் நிலையில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கி அடுத்தடுத்து விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’எஸ்கே 23’ என்ற படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் நிலையில் 'சிக்கந்தர்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடித்தவுடன் அவர் ’எஸ்கே 23’ படப்பிடிப்புக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.