இன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது என்பதும் இந்த தேர்வை மொத்தம் 8,42,512 மாணவ, மாணவியர்கள் எழுதியுள்ளனர் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது விடைத்தாள்களை திருத்தி முடிக்கப்பட்டுவிட்டதால், தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்ச், 2020 இல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மார்ச் / ஜூன் பருவத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2020 பருவத்தில் எழுதிய மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் ஆகியவை இன்று (16.07.2020) இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும், மாணாக்கர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பி வைக்கப்படும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com