'மாமன்னன்' உதயநிதியின் கடைசி படமா? இன்று இரவு அதிரடி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான உதயநிதி தற்போது எம்எல்ஏவாக இருப்பதால் அவர் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து விட்டு நடிப்புக்கு முழுக்கு போடுவார் என்று கூறப்பட்டு வந்தது.
குறிப்பாக தற்போது அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ’மாமன்னன்’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம்தான் அவரது கடைசி படம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று இரவு 8 மணிக்கு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ்திருமேனி இயக்க இருக்கிறார். எனவே உதயநிதி ஸ்டாலினுக்கு ’மாமன்னன்’ கடைசி படம் அல்ல என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்த நிலையில் அந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The title of our #ProductionNo14 will be unveiled tomorrow evening at 8pm! ✨??
— Red Giant Movies (@RedGiantMovies_) July 24, 2022
Set a reminder & get ready. @Udhaystalin #MagizhThirumeni @AgerwalNidhhi @MShenbagamoort3 #RArjunDurai @ArrolCorelli @teamaimpr pic.twitter.com/0jTR83Gbln
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments