இன்று எம்ஜிஆரின் 30வது நினைவு நாள்: நடிகர் சங்க உறுப்பினர்கள் அஞ்சலி
Send us your feedback to audioarticles@vaarta.com
புரட்சித்தலைவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் கடந்த 1987ஆம் ஆண்டு இதே நாளில் தான் காலமானார். அவர் மரணம் அடைந்து 30 ஆண்டுகள் ஆகியதை அடுத்து 30வது நினைவு நாளில் அதிமுகவினர் உள்பட பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் புரட்சி நடிகரும் முன்னாள் நடிகர் சங்கத்தலைவருமான எம்ஜிஆருக்கு, நடிகர் சங்க உறுப்பினர்கள் இன்று தங்கள் அஞ்சலியை செலுத்தினர். நடிகர் சங்க செயலாளர் விஷால், துணைத்தலைவர் கருணாஸ் உள்பட பல உறுப்பினர்கள் இன்று நடிகர் சங்க அலுவலகத்தில் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் நடிகர்கள் ராஜேஷ், ஜூனியர் பாலையா, A.L.உதயா, அஜய் ரத்தினம், தளபதி தினேஷ், மனோ பாலா, காஜா மொய்தீன், மருது பாண்டியன், ஹேமச்சந்திரன், வாசுதேவன், அயூப் கான்,ஜெரால்டு நடிகை லலிதாகுமாரி, மற்றும் பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர்களும் மலர் அஞ்சலி செலுத்தினர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com