இன்று 'லியோ' நடிகையின் பிறந்தநாள்.. இன்றைய அப்டேட் இவரது கேரக்டர் தானா?

  • IndiaGlitz, [Sunday,September 17 2023]

தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்தின் அப்டேட்டுகள் இன்று முதல் வெளியாகும் என ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கூறியிருந்த நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘லியோ’ படத்தில் நடித்த நடிகை பிரியா ஆனந்த் பிறந்தநாள் இன்று என்பதால் அவரது கேரக்டர் குறித்த போஸ்டர் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே த்ரிஷாவின் பிறந்தநாளில், அர்ஜுன் பிறந்தநாளில், சஞ்சய் தத்தின் பிறந்தநாளில் அவர்களது கேரக்டர் குறித்த போஸ்டர் வெளியான நிலையில் இன்று பிரியா ஆனந்த் பிறந்தநாளில் அவரது கேரக்டர் குறித்த 'லியோ’ போஸ்டர் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் ‘லியோ’ படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

சிம்ஹா நடிப்பில், “தடை உடை” படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்.. விரைவில் டிரைலர்..!

முத்ரா பிலிம் பேக்டரி தயாரிப்பில்,  அறிமுக இயக்குனர் ராகேஷ் N.S இயக்கத்தில். நடிகர் சிம்ஹா நடிக்கும், கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமான “தடை உடை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

எனது லட்டுகள்.. நடிகை மாதவியின் மகள்கள் என்ன அழகு.. லேட்டஸ்ட் புகைப்படம்..!

நடிகை மாதவி தனது மூன்று மகள்கள் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து 'எனது லட்டுக்கள்' என்று கேப்ஷனாக பதிவு செய்ததை அடுத்து இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல்

4 வருட திருமண வாழ்க்கை.. பரவசத்துடன் பதிவு செய்த சிம்பு, தனுஷ் நடிகை..!

தமிழில் இரண்டே இரண்டு திரைப்படங்கள் நடித்த, அதில் ஒன்று சிம்பு படம் இன்னொன்று தனுஷ் படம் என நடித்த நடிகை தனது நான்காவது திருமண நாள் குறித்து பரவசத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

எதிரியை தோற்கடிக்க உன் அழகு ஒன்றே போதும்: தர்ஷா குப்தாவின் பதிவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகை தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.  

ரஜினி-லோகேஷின் 'தலைவர் 171' படம் குறித்து கமல்ஹாசன்.. 'கமல் 234' அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தலைவர் '171' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் குறித்த தனது கருத்தை