இன்று ஒரே நாளில் 2 ரஜினி படங்களின் அப்டேட்.. குஷியில் ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Sunday,October 01 2023]

இன்று ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டு படங்களின் அப்டேட்டுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கனவே ’லால் சலாம்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 170’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனமான லைகா, சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் இரண்டு படங்களின் அப்டேட்களையும் இன்று ஒரே நாளில் அறிவிப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

முதல் கட்டமாக ’லால் சலாம்’ படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இதையடுத்து ’தலைவர் 170’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் என்றும், இயக்குனர் ஞானவேல் என்றும், இசையமைப்பாளர் அனிருத் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து இன்னும் சில மணி நேரங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ரஜினி ரசிகர்கள் இந்த அப்டேட்டுகளால் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது