தளபதி விஜய்க்கு இன்று முக்கியமான நாள்! எப்படி தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,February 17 2018]

அடுத்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நெருங்கி கொண்டிருக்கும் தளபதி விஜய், தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்பது தெரிந்ததே. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மெர்சல்' திரைப்படம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவருக்கு தென்னிந்திய மாநிலங்கள் முழுவதிலும் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது படம் வெளியாகும் தினம், ஒரு திருவிழா போல் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய் திரையுலகில் கதாநாயகனாக நுழைந்து 25 வருடங்கள் பூர்த்தியானதை கடந்த வருடம் அவரது ரசிகர்கள் கொண்டாடினர் என்பது தெரிந்ததே. ஆனால் இன்று அவரது திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான நாள்

ஆம், இதே பிப்ரவரி 17ஆம் தேதி 1984ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், விஜி நடித்த 'வெற்றி' என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் தான் முதல்முதலாக விஜய், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அவர் திரையில் முதல்முதலில் தோன்றிய இந்த தினத்தை அவரது ரசிகர்கள் சமூக இணையதளங்களில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்

More News

கமல்ஹாசனின் முதல் அரசியல் பொதுக்கூட்டத்தில் திடீர் மாற்றம்

நடிகர் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை இராமநாதபுரத்தில் உள்ள அப்துல்கலாம் இல்லத்தில் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்

சிவகார்த்திகேயனின் பட டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் மிகக்குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைந்து ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல தென்னிந்திய நடிகை

இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான 'சீம்ராஜா' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

காவிரி தீர்ப்பு குறித்து ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?

தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடந்து வந்த காவிரி பிரச்சனைக்கு இன்று சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பு வழங்கியது.

கமல்ஹாசனுடன் இந்து மக்கள் கட்சி தலைவர் திடீர் சந்திப்பு

நடிகர் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் அவரை சில அரசியல் தலைவர்களும், அவர் சில அரசியல் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.