சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவச பயணம் செய்யலாம்: ஏன் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகிய மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பேருதவியாக உள்ளது. குறைந்த கட்டணத்தில் ஏசி கோச்சில் டிராபிக் பிரச்சனை இன்றி குறித்த நேரத்தில் செல்ல முடிவதால் பெரும்பாலான சென்னைவாசிகள் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய பின்னர் சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெருக்கடி குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மெட்ரோ ரயில் ஆரம்பித்த ஒருசில நாட்கள் பயணிகள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்னரே கட்டணம் பெறப்பட்டது. இதனையடுத்து இன்று ஒருநாள் சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிகள் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை மெட்ரோ ரயிலில் தானியங்கி பயணச்சீட்டு இயந்திரம் இயங்காத காரணத்தினால் இன்று இலவசமாக பயணிக்க மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்திள்ளது. இந்த செய்தி பெரும்பாலான பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும் இன்று விடுமுறை நாள் என்பதாலும் சென்னையில் காலை முதல் மழை பெய்து கொண்டிருப்பதாலும் மெட்ரோ ரயிலின் இந்த இலவச பயணத்தை குறைந்த அளவு பயணிகளே அனுபவிப்பார்கள் என்று கருதப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments