இன்று ஒரே நாளில் ஐந்து படங்களின் டீசர், டிரைலர், சிங்கிள் ரிலீஸ்!

  • IndiaGlitz, [Wednesday,August 28 2019]

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் 4 அல்லது 5 திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதே போல் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்களின் புரோமோஷன்களும் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று ஒரு நாளில் மட்டும் 5 திரைப்படங்களின் புரோமோஷன்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடித்த 'அசுரன்' படத்தின் சிங்கிள் பாடலான கத்தரிப்பூ அழகே என்ற பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. அதே போல் சிவகார்த்திகேயன் நடித்த .நம்ம வீட்டு பிள்ளை. படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான .மைலாஞ்சி. என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

மேலும் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் 'இரண்டாம் உலகப் போரின் முதல் குண்டு' என்ற திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. அதேபோல் 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' என்ற படத்தின் டிரெய்லரும் 6 மணிக்கு வெளியாக உள்ளது. மேலும் சிபிராஜ் நடித்து வரும் 'ரங்கா' படத்தின் டீசர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட் திரையுலகில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதில் தான் போட்டி என்றால் தற்போது புரோமோனிலும் போட்டி அதிகமாகியுள்ளது. ஒரே நாளில் ஐந்து படங்களின் புரமோஷன்கள் வெளியாகயுள்ளதால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்றாலும் இந்த படத்தை புரமோஷன் செய்யும் பட நிறுவனங்களுக்கு திண்டாட்டமாகவே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'நம்ம வீட்டு பிள்ளை' மைலாஞ்சி பாடல் குறித்த தகவல்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'மைலாஞ்சி'

இசையமைப்பாளராகும் பிரபல பின்னணி பாடகர்

பிரபல பின்னணி பாடகர்களான எஸ்பிபி, கேஜே ஜேசுதஸ் உள்ளிட்ட பலர் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் நிலையில் தற்போது இளம் பின்னணி பாடகர் ஒருவர் இசையமைப்பாளர் ஆகியுள்ளார். அவர்தான் பாடகர் அஜீஸ்

நடுக்கடலில் மனைவி அனுஷ்காவுடன் வெற்றியை கொண்டாடிய விராத் கோஹ்லி!

விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது.

யோகிபாபு படக்குழுவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய நித்யானந்தா

யோகிபாபு, வருண் நடிப்பில் முரட்டு சிங்கிள் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பப்பி'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று

கார்த்தியின் 'கைதி' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு:

கார்த்தி நடித்து வந்த 'கைதி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது