ஓவியா, ஜூலி வேலைக்காரர்களா? பிக்பாஸ் குடும்பத்தில் திடீர் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது காமெடி காட்சிகளும், போலியான காட்சிகளும் நடந்து வருவதாக கூறப்பட்டாலும், சில சமயம் சீரியஸ் காட்சிகளும் நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில் சற்று முன் வெளியான இன்றைய புரமோ வீடியோவில் ஜூலியும் ஓவியாவும் ஓரம்கட்டப்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புரமோ வீடியோவில் சூழ்ச்சிகள் நிறைந்த லக்சரி பட்ஜெட் டாஸ்க் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் ஒரு குடும்ப உறவுகளாக தங்களை அடையாளப்படுத்தி இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொருவருக்கும் ஒரு உறவுமுறை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
வையாபுரி மூத்தவர் என்ற வகையில் உறவுமுறையை அறிவிக்கின்றார். கணேஷ் மற்றும் நமீதா முத்த மகன் மற்றும் மூத்த மருமகள் என்றும், சக்தி மற்றும் காயத்ரி இரண்டாவது மகன் மற்றும் இரண்டாவது மருமகள் என்றும் வையாபுரி அறிவிக்கின்றார்.
மேலும் ஜூலி மற்றும் ஓவியா இருவரும் குடும்பத்தின் வேலையாட்கள் என்றும் இவர்கள் இருவர் மட்டுமே குக்கிங் மற்றும் கிளினிங் வேலைகளை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஓவியா, ஜூலி அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் இன்றைய நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout