சென்னையில் முதல்முறையாக சதமடித்தது பெட்ரோல் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Friday,July 02 2021]

சென்னையில் பெட்ரோல் விலை முதல் முறையாக சதம் அடித்தது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

கடந்த சில நாட்களாக தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர் என்பதும் இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை கிட்டத்தட்ட தினமும் உயர்த்தி வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் விலை 33 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 100.13 என விற்பனையாகி வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை முதல்முறையாக ரூபாய் 100ஐ கடந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் டீசல் விலை நேற்றைய விலையான ரூ.93.72 என்ற விலையில் என்பது குறிப்பிடத்தக்கது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதாக மத்திய மாநில அரசுகள் விளக்கம் கொடுத்தாலும் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் எரிபொருள் விலை நிர்ணய உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து திரும்பப் பெற்று மத்திய அரசு கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன என்பது குறிப்ப்பிடத்தக்கது.