கதறிகதறி அழும் டேனியல் ரித்விகா, நித்யா: காரணம் என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
தினமும் இரண்டு மணி நேரம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட தினமும் வெளியாகும் 30 வினாடிகளே உள்ள புரமோ வீடியோக்கள் நன்றாக இருப்பதாக் பிக்பாஸ் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த புரமோ வீடியோக்களின் எடிட்டர்களுக்கு நிச்சயம் பெரிய பரிசு கொடுக்க வேண்டும். ஒன்றுமே இல்லாத மொக்கையான விஷயங்களை தங்களது எடிட்டிங் திறமையின் மூலம் நிகழ்ச்சியை பார்க்கும்படி தூண்டிவிடுகின்றனர்.
இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு நேர்ந்த சோக நிகழ்ச்சி ஒன்றை மற்ற போட்டியாளர்களிடமும் பகிர்ந்து கொள்கின்றனர். அவ்வாறு அவர்கள் கூறும்போது அவர்களையும் அறியாமல் கதறி அழுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் உள்ள அனைவருமே கிட்டத்தட்ட செலிபிரிட்டிகள் என்பதால் அழுகை சர்வசாதாரணமாக வருகிறது.
டேனியல், ரித்விகா ஆகிய இருவரும் தங்களது தந்தை குறித்தும், பாலாஜி தனது அன்பு மகள் குறித்தும், 'ஊரே என்னை கெட்டவள் என்று தூற்றியபோது என் அப்பா மட்டும் என் பொண்ணு அப்படி செஞ்சிருக்க மாட்டா' என்று தந்தை கூறியதாக நித்யா கூறியதை மற்ற போட்டியாளர்கள் சோகத்துடன் பார்த்து கொண்டிருக்கின்றனர். பார்வையாளர்களுக்கு இனிமேலும் இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டுமா? என்ற எண்ணத்தை வரவழைக்கும் புரமோ வீடியோவாக இது உள்ளது.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/u42lsbf2Dx
— Vijay Television (@vijaytelevision) July 6, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments