தற்கொலை செய்து கொள்ள போகிறேன்: பிக்பாஸ் வீட்டில் கதறும் மும்தாஜ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதி, முதல் பகுதி போல் விறுவிறுப்பாக இல்லை என்றும், போட்டியாளர்கள் தேர்வு சரியில்லை என்றும் நெட்டிசன்கள் கூறி வரும் நிலையில் அது உண்மை என்ற வகையில்தான் இந்த நிகழ்ச்சியும் இதுவரை போய் கொண்டிருக்கின்றது.
நேற்று ஆரம்பித்த வெங்காய பிரச்சனை இன்றும் தொடர்வதை போல் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் தெரிகிறது. மும்தாஜ், நித்யா ஆகிய இருவரும் இன்று சமையல் செய்து கொண்டிருக்கும்போது நித்யா, மகத் குறித்து ஏதோ கூற, அதற்கு மும்தாஜ், 'காலையிலேயே வேண்டாம், என்னை விட்ருங்க, I am going to kill myself' என்று வெறுப்புடன் கூறுகிறார்.
இதனை பார்த்த பாலாஜி, 'இப்ப புரியுதா என்னோட நிலைமை' என்று மும்தாஜை நோக்கி கூற அதற்கு நித்யா முறைப்பது போல் புரமோ வீடியோவில் உள்ளது. ஆனால் புரமோ வீடியோவில் உள்ள சுவாரஸ்யம் நிகழ்ச்சியை பார்க்கும்போது இல்லை என்பதே பெரும்பாலானோர்களின் கருத்தாக இருக்கும் நிலையில் இன்றைய நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/B7bKHNqs9J
— Vijay Television (@vijaytelevision) June 21, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments