திருடர்கள் காவல்துறைக்கு உதவுகிறார்கள்: கமல் குறிப்பிட்டது யாரை?
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்ச்யில் நேற்று 'கடைக்குட்டி சிங்கம்' படக்குழுவினர் சென்று கலகலப்பை உண்டாக்கியது மட்டுமின்றி போட்டியாளர்களின் குறைகளையும் எடுத்து கூறினர். குறிப்பாக போட்டியாளர்கள் தங்களுடைய இயல்பான சுபாவத்தில் இல்லாமல் நடிப்பதை கார்த்தி சுட்டிக்காட்டினார். எனவே பிக்பாஸ் போட்டியாளர்கள் இனியாவது திருந்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் தோன்றும் நாள் என்பதால் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் 'காவல்துறை பொதுமக்களுக்கு நண்பன், திருடர்களுக்கு பகைவன் என்பதுதான் வழக்கம். ஆனால் பிக்பாஸ் வீட்டில் திருடர்கள், காவல்துறைக்கு உதவுகின்றனர், பொதுமக்கள் காவல்துறையை உதறுகிறார்கள்' என்று கூறி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இருப்பினும் பிக்பாஸ் ஸ்க்ரிப்ட் ரைட்டர்கள் இன்னும் கொஞ்சம் யோசித்து சுவாரஸ்யமான ஸ்க்ரிப்ட்டை எழுத வேண்டும் என்பதும், வீட்டில் உள்ள பிரச்சனைக்குரியவர்கள் சிலரை வெளியேற்ற வேண்டும் என்பதும் பார்வையாளர்கள் பலரின் வேண்டுகோளாக உள்ளது.
???? #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/vMACsoGC9W
— Vijay Television (@vijaytelevision) July 14, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments