இன்றும் தெறிக்கவிட்ட ரசிகர்கள்: நெய்வேலி குலுங்கியது

  • IndiaGlitz, [Monday,February 10 2020]

தளபதி விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை பரபரப்பாக்கிய பெருமை வருமான வரி அலுவலக அதிகாரிகளுக்கே சேரும். அமைதியாக எந்தவித ஆர்ப்பாட்டமின்றி படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் திடீரென விஜய்யை வருமான வரித்துறையினர் சென்னைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதை அடுத்து நெய்வேலி குலுங்க தொடங்கியது.

குறிப்பாக பாஜகவினர் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த அடுத்த நிமிடத்தில் இருந்தே விஜய் ரசிகர்கல் படப்பிடிப்பு நடக்கும் இடம் அருகே ஆயிரக்கணக்கில் குவிய தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று ரசிகர்களை நோக்கி கையசைத்த விஜய், அவர்களுடன் செல்பியும் எடுத்து கொண்டார் என்பதும், அந்த செல்பி இன்று அவருடைய டுவிட்டர் தளத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றும் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளியே வந்த விஜய், தன்னை பார்க்க காத்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை நோக்கி வேனில் ஏறி கையைசைத்த விஜய் அவர்களிடம் தனது மகிழ்ச்சியையும் பதிவு செய்து கொண்டார். விஜய்யை பார்க்க கூடிய கூட்டத்தால் அந்த பகுதியே குலுங்கியது என்று கூறினால் அது மிகையாகாது என்ற அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

படக்குழுவினர்களுக்கு பஜ்ஜி சுட்டு கொடுத்த பிரபல நடிகர்: வைரலாகும் வீடியோ

நடிகர் அஜித் தான் நடித்து வரும் படத்தின் குழுவினர்களுக்கு பிரியாணி செய்து கொடுப்பார் என்பது அனைவரும் அறிந்ததே.

'நெய்வேலிக்கு நன்றி': விஜய் வெளியிட்ட செல்பி புகைப்படம்

நேற்று நெய்வேலியில் தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரசிகர்களை நோக்கி கையசைத்ததோடு அதன் பின்னர் வேனில் ஏறி ரசிகர்களுடன் இணைந்து ஒரு செல்பி எடுத்துக்கொண்டார்.

நான் ஒரு விஜய் ரசிகை: துணிச்சலுடன் கூறிய ரஜினி தனுஷ்-சிம்பு பட நடிகை

பிரபல நடிகைகள் மற்றும் வளர்ந்து வரும் நடிகைகளிடம் நீங்கள் யாருடைய ரசிகர் என்று கேட்டால் ஒரு குறிப்பிட்ட நடிகரை சொல்லாமல் நழுவி விடுவார்கள் என்பதுதான் என்பது தெரிந்ததே

அமெரிக்காவை காப்பாற்ற ஒரே வழி டிரம்ப் பதவி விலகுவதே..!மலேசிய பிரதமர் மகாதீர்.

அமெரிக்க மக்கள் குறித்து நான் ஏதும் சொல்லவில்லை. அமெரிக்க குடிமக்கள் மிகவும் நல்லவர்கள். ஆனால் அதிபர் டிரம்ப் அப்படியல்ல.

கொரோனோ வைரஸிலிருந்து சீனாவை காக்க இந்தியா தயாராக இருக்கிறது..! பிரதமர் மோடி.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க இந்தியா உதவத் தயார் என, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.