இன்று மட்டும் பிற்பகல் 3 மணி வரை கடைகள் செயல்படும்: சென்னை மாநகராட்சி

சென்னை, மதுரை, கோவை உள்பட 5 நகரங்களில் நாளை முதல் 29ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே ஏப்ரல் 26 வரை 29 வரை அத்தியாவசிய தேவைக்குரிய கடைகள் கூட நான்கு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக இன்று காலை முதலே பொதுமக்கள் காய்கறி, மளிகைக்கடைகளில் குவிந்துள்ளனர். ஒருசில இடங்களில் சமூக விலகலைக்கூட பின்பற்றாமல் பொதுமக்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில் இன்று ஒருநாள் மட்டும் மாலை 6 மணி வரை கடைகள் திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் சென்னையில் இன்று மட்டும் 2 மணி நேரம் கூடுதலாக அதாவது பிற்பகல் 3 மணி வரை கடைகளை திறந்து வைத்திருக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. சென்னை மட்டுமின்றி கோவை, மதுரை, சேலம், திருப்பூரில் இன்று மட்டும் பிற்பகல் 3 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எனவே சென்னை உள்பட 5 நகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் நான்கு நாட்களுக்கு தேவையான மளிகை, காய்கறி ஆகியவறை மதியம் 3 மணிக்குள் வாங்கி கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

More News

மருத்துவர் சைமன் மனைவியின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை மாநகராட்சி

சமீபத்தில் கொரோனாவால் மரணம் அடைந்த மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவசர அவசரமாக அவரது நண்பர் காவல்துறையின் அறிவுறுத்தலின்படி  மத வழக்கப்படி

கொரோனா வைரஸ் பரவல் குறித்த விசாரணைக்கு மறுக்கிறதா சீனா??? நடப்பது என்ன???

தற்போது உலக நாடுகள் கொரோனா பரவல் பற்றிய முழுமையான தகவல்களைத் தெரிந்து கொள்ள சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

சூர்யா படங்களுக்கு ரெட் கார்ட்? தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில் திடீரென கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எவ்வளவு? மத்திய சுகாதார அமைப்பு தகவல்

இந்தியாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதிலும் நாளுக்கு கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது.

தப்பாட்ட கலைஞர்களுக்கு உதவிய விஜய் ரசிகர் மன்றத்தினர் 

கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் மத்திய மாநில அரசுகள் மற்றும் அண்டை மாநில அரசுகளுக்கு என மொத்தம் 1.30 கோடி ரூபாய் நிதி உதவி செய்த தளபதி விஜய்,