இன்று ஆடி முதல் வெள்ளி: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எங்கே போயிருக்கார் பாருங்க!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காமாட்சி கோவிலுக்கு சென்றதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அம்மனுக்கு விசேஷமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இன்று ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காமாட்சி அம்மனுக்கு கோயிலுக்கு சென்று வழிபட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அங்கு அவர் தீபம் ஏற்றி வழிபட்டதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த பதிவில் ‘ஆடி வெள்ளி எப்பொழுதும் காப்பாய் காமாட்சி’ என்று கேப்ஷனாகவும் அவர் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ஹிந்தியில் 'ஓ சாதிசால்’ என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்பதும், செளந்தர்யா ரஜினியின் கணவர் விசாகன் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.