தமிழகத்தில் புதிதாக 76 பேருக்கு கொரோனா தொற்று: சென்னையில் மட்டும் 55!

தமிழகத்தில் கொரொனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் இன்று செய்தியாளர்கள் 26 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி தமிழகத்தில் இன்று 76 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 76 பேர்களில் 55 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 358 என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று தமிழகத்தில் இன்று ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 178 என்றும் இதனையடுத்து மொத்த குணமானவர்களின் எண்ணிக்கை 635 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் மாவட்டவாரியாக சென்னையில் மிக அதிகமாக 358 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்து கோவையில் 134 பேர்களும், திருப்பூரில் 100 பேர்களும், திண்டுக்கல்லில் 76 பேர்களும், ஈரோட்டில் 70 பேர்களும், நெல்லையில் 62 பேர்களும், செங்கல்பட்டில் 56 பேர்களும், நாமக்கல்லில் 51 பேர்களும், திருச்சியில் 50 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

தமிழ் நடிகரின் கண்ணீர் வீடியோவை அஜித்திடம் சேர்த்த ராகவா லாரன்ஸ்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் கோலிவுட் திரையுலகில் நலிந்த நடிகர்கள் பலர் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

விஜயகாந்த் தான் உண்மையான சூப்பர் ஸ்டார்: பிரபல ஹீரோ பாராட்டு

நேற்று சென்னையில் கொரோனாவால் பலியான மருத்துவர் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தியதும் அதன் பின்னர் போலீசார் தலையிட்டு போராட்டம் நடத்திய 20 பேரை கைது

கொரோனா நேரத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்த சீனா!!! தக்கப் பதிலடி கொடுத்த இந்தியா!!!

கொரோனா கோரத் தாண்டவத்தில் இருந்து தற்போது சீனா மீண்டு வந்திருக்கிறது.

கொரோனா பரவல்: தொடரும் குற்றச்சாட்டுகளுக்கு சீனாவின்  வுஹான் ஆய்வகம் விளக்கம்!!!

கொரோனா பரவலைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் வதந்திகள் பரப்பப்பட்டன.

அலட்சியத்தால், கொரோனா நோயாளியை அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்த மருத்துவர்!!!

அலிகார் முஸ்லீம் பல்கழைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட AMU ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.