close
Choose your channels

தமிழகத்தில் இன்று கொரோனா பாசிட்டிவ் எத்தனை பேருக்கு? சுகாதாரத்துறை தகவல்

Sunday, April 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் இன்று புதிதாக 64 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும், சென்னையில் இன்று மட்டும் 28 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 1885 ஆகவும், சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 523 ஆகவும் உயர்ந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 60 என்றும், இதனையடுத்து தமிழகத்தில் 1020 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இன்று ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இதுவரை தமிழகத்தில் 24 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று சென்னையில் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையை அடுத்து 15 பேர் மதுரையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விருதுநகரில் 7 பேர்களும், விழுப்புரம் மற்றும் நாமக்கல்லில் தலா 4 பேர்களும், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos