தமிழகத்தில் புதிதாக கொரோனாவுக்கு 600 பேர் பாதிப்பு: 6000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் இன்று பாதிப்படைந்தவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் சற்றுமுன் தெரிவித்துள்ளார். இதன்படி தமிழ்நாட்டில் இன்று மட்டும் 600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 6009 என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 600 பேர்களில் சென்னையில் மட்டும் 391 பேர்கள் என்றும் இதனை அடுத்து சென்னையில் கொரோனாவால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3035 என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 13,980 பெயருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 417 பேர்களுக்கு மொத்தம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் மூன்று பேர் பலியாகி இருப்பதாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் மொத்த பலி 40 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்

More News

கிரேஸி மோகன் காமெடியை ரிப்பீட் செய்த விஜய்சேதுபதி மீது காவல்துறையில் புகார்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது கடவுள் குளிப்பதை காட்டுகிறார்கள்,

கொரோனா தடுப்பூசி:  இறுதிக்கட்ட சோதனையை நடத்திவரும் நாடுகள்!!! நிலவரம் என்ன???

கொரோனா பரவல் உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தடுப்பூசி பற்றிய ஆராய்ச்சிகள் உலக நாடுகளால் விரைப்படுத்தப் பட்டிருக்கின்றன.

திரைப்படத்துறையினர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

தமிழ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியின் போது உரிய சமூக இடைவெளி

நேற்று நிலவு நடத்திய அற்புதமான கண்காட்சி!!!  

இயற்கை சில நேரங்களில் தனது அழக்கை காட்டி மனிதர்களை ஊற்சாகப்படுத்தும். அப்படியொரு நிகழ்வை நேற்று, நிலவு அரங்கேற்றியிருந்தது

சசிகுமாரிடம் பெற்ற கடனை திருப்பி கொடுத்துவிடுவேன்: ஒரு விவசாயியின் தன்னம்பிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.