இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? தலைமைச்செயலர் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கொரோனாவால் ஒவ்வொரு நாளும் 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று வரை மொத்தம் 911 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் என்று தலைமைச் செயலாளர் அவர்கள் தெரிவித்து இருந்தார் என்பதைப் பார்த்தோம்
இந்த நிலையில் இன்று புதியதாக 58 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 969 என்றும் தலைமைச் செயலாளர் சற்றுமுன் தெரிவித்துள்ளார்
மேலும் 455 நபர்களுக்கு கொரோனாவால் தொற்று பரிசோதனையின் முடிவுகள் வர வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இன்று ஈரோட்டில் ஒருவர் இறந்ததை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது என்றும் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் அவரது அறிவிப்பை தமிழகம் பின்பற்றும் என்றும் தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments