இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? தலைமைச்செயலர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் ஒவ்வொரு நாளும் 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று வரை மொத்தம் 911 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் என்று தலைமைச் செயலாளர் அவர்கள் தெரிவித்து இருந்தார் என்பதைப் பார்த்தோம்

இந்த நிலையில் இன்று புதியதாக 58 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 969 என்றும் தலைமைச் செயலாளர் சற்றுமுன் தெரிவித்துள்ளார்

மேலும் 455 நபர்களுக்கு கொரோனாவால் தொற்று பரிசோதனையின் முடிவுகள் வர வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இன்று ஈரோட்டில் ஒருவர் இறந்ததை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது என்றும் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் அவரது அறிவிப்பை தமிழகம் பின்பற்றும் என்றும் தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்

More News

ஊரடங்கு நேரத்தில் நடந்த இளம் நடிகர்-நடிகையின் காதல் திருமணம்

https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/04/11143203/1415134/Kannada-actor-simple-marriage.vpf

ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்த மேலும் ஒரு மாநிலம்

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மத்திய அரசு அதிரடியாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.

ராகவா லாரன்ஸின் 5 மணி அறிவிப்பு இதுதான்

நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் சமீபத்தில் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக ரூபாய் 3 கோடி அளித்திருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் உயிரிழந்த 3 வயது குழந்தை: அதிர்ச்சியில் தாய்

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் 3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் குறித்த தகவல்

தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்பட பலர் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,