தமிழகத்தில் இன்று மேலும் அதிகரித்த கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை சுகாதாரத்துறை தினமும் தெரிவித்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக 50க்கும் குறைவாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்தால் பொதுமக்களுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டு இருந்தது.

ஆனால் இன்று திடீரென தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 56 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1323 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் சென்னையில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து சென்னையில் மட்டும் மொத்தம் 228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை சற்றுமுன் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து 283 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழப்பு ஏதும் இல்லை என்பதால் மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இதுவரை தமிழகத்தில் 29676 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொரோனா வார்டில் 1891 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

More News

ஜஸ்டின் பீபர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட 'கோமாளி' நடிகை

ஊரடங்கு நேரத்தில் படப்பிடிப்பு இல்லாத நடிகர் நடிகைகள் பலர் வித்தியாசமான வீடியோக்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வீடியோக்களை

5 மாநிலங்கள், 2700கிமீ: மகனை பார்ப்பதற்காக பயணம் செய்த தாய்!

சமீபத்தில் தெலுங்கானாவை சேர்ந்த பெண் ஒருவர் ஆந்திராவில் சிக்கித் தவித்த தனது மகனை மீட்பதற்காக 1400 கிமீ தனது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து அழைத்து வந்தார் என்பதை பார்த்தோம்

அமெரிக்காவை கூட காப்பாற்றிவிடலாம், ஆனால் இந்தியாவை... பார்த்திபன்!

தமிழகம் உள்பட இந்தியாவில் மே 3வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 20ஆம் தேதி முதல் ஒருசில துறைகளுக்கு ஊரடங்கு தளர்த்தப்படலாம்

சாலைகளில் உறங்கும் சிங்கங்கள்!!!

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படாத ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள நாடுகளில் கூட தற்போது ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

கொரோனா நேரத்தில் நம்பிக்கை அளிக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள்!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீடிக்கப்பட்டிருக்கிறது.