தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் இன்று புதிதாக 33 பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1629ஆக உயர்ந்துள்ளது.

இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 33 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 15 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை அடுத்து தஞ்சையில் 5 பேர்களும், மதுரையில் 4 பேர்களும், அரியலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் தலா இருவரும், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து இன்று 27 பேர் வீடு திரும்பினர் என்பதும், இதுவரையில் 662 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 5978 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இதனையடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 59023 என்றும், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

More News

ரஜினி, கமல் பட நாயகியின் ஃபேஸ்புக் கணக்கு ஹேக்: போலீஸில் புகார்

ரஜினிகாந்த் நடித்த 'தளபதி', 'சிவா', கமல்ஹாசன் நடித்த 'எனக்குள் ஒருவன்' உள்பட பல திரைப்படங்களில் நாயகியாக கடந்த 90களில் பிரபலமாக இருந்தவர் நடிகை ஷோபனா.

ஆன்லைனில் ரிலீஸ் ஆகிறதா அனுஷ்கா படம்? தயாரிப்பு தரப்பு விளக்கம்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீடிக்கும்

கொரோனாவால் உலகம் முழுவதும் பசி, பட்டிணி இரட்டிப்பாகும்!!! ஐ.நா. சபை எச்சரிக்கை!!!

“கொரோனா வைரஸ் பாதிப்பு உலகளவில் பசி, பட்டிணியின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும்” என ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.

ஊரடங்கு நேரத்திலும் திகிலூட்டும் தங்கத்தின் விலை!!! ஏன் இந்த நிலைமை???

கொரோனா பாதிப்பினால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. யாரும் கடைகளில் தங்கத்தை விற்கவுமில்லை.

கொரோனாவைத் தடுக்கும் புரதம்: முதற்கட்ட ஆய்வில் வெற்றிப்பெற்றுள்ள எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்!!!

கொரோனா தடுப்பு மருந்துகளுக்கான ஆராய்ச்சியில் உலக நாடுகள் வேகமாகப் பணியாற்றி வருகின்றன.