தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? சுகாதாரத்துறை தகவல்
- IndiaGlitz, [Wednesday,April 22 2020]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் இன்று புதிதாக 33 பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1629ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 33 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 15 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை அடுத்து தஞ்சையில் 5 பேர்களும், மதுரையில் 4 பேர்களும், அரியலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் தலா இருவரும், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து இன்று 27 பேர் வீடு திரும்பினர் என்பதும், இதுவரையில் 662 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 5978 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இதனையடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 59023 என்றும், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.