தமிழகத்தில் இன்று 25 பாசிட்டிவ் மட்டுமே, விரைவில் கொரோனாயில்லா மாநிலம்: முதல்வர் நம்பிக்கை

தமிழகத்தில் கொரோனாவால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தினமும் 50க்கு மேல் இருந்து வந்தது என்பதும், ஒருசில நாட்களில் 100க்கும் மேல் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே. ஆனால் தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை, ஊரடங்கு உத்தரவுக்கு பொதுமக்கள் கொடுத்த ஒத்துழைப்பு ஆகியவை காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது

நேற்று முன்தினம் 31 பேர், நேற்று 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 25 பேர் மட்டுமே புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1267 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று ஒருவர் கொரோனாவால் பலியாகியுள்ளதால் தமிழகத்தில் கொரொனாவுக்கு இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்துவிடும் என்றும் ஒரு சில நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்ற அளவுக்கு வந்துவிடும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்

More News

குற்றப்பரம்பரை கதையை படிக்கும் பிரபல இயக்குனர்: பாலா பாரதிராஜாவுக்கு போட்டியா?

எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய 'குற்றப்பரம்பரை' என்ற படத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா திரைப்படமாக இயக்க இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது

இதுவே ரொம்ப லேட்: பிரபல இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்த தல அஜித்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வெற்றிப் படங்களில் ஒன்றான 'பில்லா' படத்தின் ரீமேக் படமான 'பில்லா' மற்றும் 'ஆரம்பம்' ஆகிய இரண்டு அஜித் படங்களை இயக்கியவர் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் என்பது தெரிந்ததே.

பீட்சா டெலிவரி செய்தவருக்கு கொரோனா: ஏரியாவையே மடக்கிய காவல்துறை

டெல்லியில் பீட்சா டெலிவரி செய்த நபர் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் வசித்த பகுதி மற்றும் அவர் பீட்சா டெலிவரி செய்த பகுதி முழுவதையும்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கஃபே கலந்துகொண்ட திருமணத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு!!!

தமிழகத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்து வரும் நிலோபர் கஃபே கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரு திருமணத்தில் கலந்து கொண்டார்.

இந்தியாவுக்கு 650,000 கொரோனா மருத்துவக் கருவிகளை  அனுப்பி வைத்துள்ளது சீனா!!!

கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்துப்போராட 650,000 கொரோனா மருத்துவக் கருவிகளை சீனா இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.