மாமியாரும் மிகச்சிறந்த அம்மாதான்.. நயன் அம்மாவிடம் ஆசி வாங்கிய விக்னேஷ் சிவன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் தமிழ் திரை உலக நட்சத்திரங்கள் பலர் தங்கள் அன்னையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா தனது குழந்தையிடம் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து 'மிகச் சிறந்த அன்னை’ என்று அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
இதனை அடுத்து மேலும் அவர் செய்த ஒரு பதிவில் ’மிகச் சிறந்த அம்மாக்களில் மாமியாரும் ஒருவர், அவருக்கு எனது அன்னையர் தின வாழ்த்துக்கள், தூய்மையான உள்ளம் கொண்ட அவரிடம் நான் நிறைய நேரம் செலவு செய்துள்ளேன்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது
மேலும் நயன்தாரா குறித்து அவர் கூறிய போது ’ஒரு அன்னையாக அவருக்கு நான் பத்துக்கு பத்து மதிப்பெண் கொடுப்பேன். அபரீதமான அன்பும் வலிமையும் உள்ளவர். என் தங்கமே.. உனக்கு முதல் அன்னையர் தினம், எங்களுக்கு ஒரு மிகப்பெரிய கனவு. சிறந்த ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளை எங்களுக்கு அளித்த கடவுளுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் தனது அம்மா மீனாகுமாரியுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்த விக்னேஷ் சிவன், ‘புர்ஜ் கலீபாவை விட உயரமான இந்த வாழ்க்கையை கொடுக்க எனது அம்மா எடுத்த அன்பும் முயற்சியும் மிக அதிகம், உலகின் மிகச்சிறந்த தாய் என்றும் பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments