ஊரடங்கை தளர்த்த “R” மதிப்பு குறைவாக இருக்க வேண்டும்??? உலக நாடுகள் பின்னபற்றும் அளவீடு!!!

  • IndiaGlitz, [Monday,May 18 2020]

 

 

கொரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அமல் படுத்தின. சில நாடுகளில் கடுமையாகவும் சில நாடுகளில் மென்மையாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது பெரும்பாலான நாடுகள் ஊரடங்கில் சில தளர்வுகளைச் செய்து வருகிறது. இந்த தளர்வுகள் எதை அடிப்படையாகக் கொண்டு செய்யப் படுகிறது? கொரோனா பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப் படாமலே எதற்காக ஊரடங்கு விலக்கு அளிக்கப் படுகிறது? என்பது போன்ற கேள்விகள் தற்போது விவாதப் பொருளாகி இருக்கிறது.

இந்நிலையில் ஒரு நாட்டில் ஊரடங்கு எதைப் பொறுத்து தளர்த்தப் படுகிறது, இதற்கு உலகம் முழுவதும் ஏதேனும் விதிமுறை கடைப்பிடிக்கப் படுகிறதா என்பதும் கவனிக்க வேண்டிய விசயம். கொரோனா இறப்பு எண்ணிக்கை அல்லது பரவல் விகிதத்தைப் பொறுத்து ஊரடங்கில் தளர்த்தப்படுகிறது எனப் பொதுவாகச் சொல்லப் பட்டாலும் இந்த கணக்குகளை விட “R” மதிப்பு குறைவாக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் தான் ஒரு நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட வேண்டும் என்ற விதிமுறையை தற்போது அனைத்து நாடுகளும் பின்பற்ற ஆரம்பித்து இருக்கின்றன.

“R” மதிப்பு அளவீடு

இங்கிலாந்து நாட்டின் அளவு முறையான இந்த மதிப்பீடு முறையை ”இனப்பெருக்க மதிப்பு”, ‘Ro’ அல்லது R Naugh, R0 எனப் பல பெயர்களால் அழைக்கப் படுகிறது. இந்த அளவீட்டு முறையை வைத்து ஒரு பெருந்தொற்று நேரத்தில் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் எத்தனை பேருக்கு நோயை பரப்புகிறார் என முறையாக அளவிட முடியும். இந்த அளவீட்டு முறையை அடிப்படையாகக் கொண்டுதான் இங்கிலாந்து அரசு ஊரடங்கு தளர்வை பிறப்பித்தது. அந்நாட்டின் “R” மதிப்பு 1 க்கும் கீழ் இருப்பதால் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும் கூறப்பட்டது. தொடர்ந்து மே 11 ஆம் தேதியை பொறுத்த வரை “R” மதிப்பு 0.5-0.9 ஆக குறைந்து இருப்பதாகக் கூறப்பட்டது. மே 14 ஆம் தேதி இந்த அளவு 0.4 க்கும் குறைவாக பதிவானதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த அளவீட்டு முறையை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு நாடும் தங்களது ஊரடங்கை தளர்த்தி வருகின்றன.

இங்கிலாந்தில் முழுமையாக ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் தற்போது அதன் “R” மதிப்பு 0.7 – 1.0 ஆக அதிகரித்து இருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அறிவித்து இருக்கிறது. “R” மதிப்பு 1 க்குள் இருக்கும்போது நோயால் பாதிக்கப்பட்ட நபர் இன்னொரு நபருக்கு மட்டுமே நோயை பரப்புகிறார். இந்த அளவு 1 தாண்டி போகும் போது ஒரு நபர் குறைந்தது 2 நபருக்கு நோயைப் பரப்புகிறார் என்று அர்த்தம். மேலும் “R” மதிப்பு 2 ஐ தாண்டி செல்லும் ஒருவர்  குறைந்தது 8 பேருக்கு  நோயைப் பரப்புகிறார். இப்படி “R” மதிப்பு அதிகமாகும்போது அதைப் பொறுத்து நோய் பரவும் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு நாட்டில் நோய் பரவும் விகிதத்தை கணக்கிடும் 5 முக்கியமான சோதனையில் “R” மதிப்பும் ஒன்றாக முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது.

தற்போது ஜெர்மனியின் “R” மதிப்பு 0.7 ஆக இருப்பதாகத் தெரிவித்து உள்ளது. “R” மதிப்பு 0.5 ஆக இருக்கும்போது அந்நாட்டில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா இருக்கிறது என்று அர்த்தம். 1க்கு கீழே இருக்கும்போது கொரோனா எண்ணிக்கை 7454 . 1 ஐ விட அதிகரித்து சென்றால் கொரோனா எண்ணிக்கை 13 ஆயிரமாகவும் அதுவே 2 ஆக அதிகரித்து காணப்பட்டால் 81 லட்சத்தையும் தாண்டுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது. WHO கணிப்பின்படி தடுப்பூசி கண்டுபிடிக்காத நிலையில் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் குறைந்தது 3 பேருக்கு நோயை பரப்புகிறார் எனக் கூறப்பட்டது. அதுவே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு 3 கொரோனா நோயாளிகளில் 2 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருந்தால் ஒருநோயாளி தன்னிடம் இருந்து மற்றொருவருக்கு மட்டுமே நோயை பரப்ப முடியும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசியோ முறையாக சிகிச்சை மருந்துகளோ கண்டுபிடிக்கப்படாத நிலையில் தற்போது சமூக விலகல் மட்டுமே விஞ்ஞானிகளால் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் “R” மதிப்பு குறைந்தது 1 க்கு கீழே இருந்தால் மட்டுமே ஊரடங்கை தளர்த்துமாறு விஞ்ஞானிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

More News

ஊரடங்கு முடிந்தபின் இதை வைத்து கொள்ளலாமே: அரசுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள்

தேர்வு என்பது மாணவர்களுக்கு மட்டுமின்றி அவர்களுடைய பெற்றோர்களுக்கும் மன இறுக்கமானது என்றும் எனவே பத்தாம் வகுப்பு தேர்வை ஊரடங்கு முடிந்த் பின்னர் வைத்துக் கொள்ளலாமே

மரணமாஸ் 'மாஸ்டர்' டிரைலரை 6 முறை பார்த்தேன்: பிரபல நடிகர்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதியே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக தேதி

நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடையும் நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம்

மீண்டும் எகிறிய கொரோனா பாதிப்பு: இன்று எத்தனை பேர்?

தமிழகத்தில் நேற்று 477 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், 939 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகியதுமான செய்திகள் வெளிவந்ததால் தமிழகத்தில் பாசிட்டிவ் அறிகுறி ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

டாக்டரை கயிற்றால் கட்டி தரதரவென இழுத்து சென்ற போலீசார்: அதிர்ச்சி தகவல்

ஆந்திராவில் டாக்டர் ஒருவரின் கைகளை கயிற்றால் கட்டி தரதரவென போலீசார் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது