12ஆம் வகுப்பு படித்த இளைஞர் ஆன்லைனில் ரூ.5 கோடி மோசடி செய்தது எப்படி? திடுக்கிடும் தகவல்

  • IndiaGlitz, [Sunday,July 04 2021]

12ஆம் வகுப்பு மட்டுமே படித்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் மூலம் ரூபாய் ஐந்து கோடிக்கு மேல் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அகமதாபாத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் 21 வயது மகன் ஹர்ஷவர்தன் பார்மர். இவர் திடீரென ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாகவும் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பரிவர்த்தனை செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன. அந்த இளைஞனின் நடவடிக்கைகளைப் பார்த்து சந்தேகப்பட்ட காவல்துறையினர் இளைஞனை கைது செய்து விசாரணை செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன

ஹர்ஷவர்தனுகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்தபா என்பவர் அறிமுகமாகியதாகவும்,அவரின் மூலம் ரஷ்யாவில் உள்ள ஹேக்கர்கள் தொடர்பு கிடைத்ததாகவும் அந்தத் தொடர்பின் மூலம் உலகின் 40 நாடுகளில் உள்ள சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் மோசடியாக பல ஆடம்பர பொருட்களை வாங்கியதாகவும் தெரிகிறது

இதற்காக ஒடிபி தேவைப்படாத நாடுகளிலுள்ள வாடிக்கையாளர்களை தேர்வு செய்து, அவர்களுடைய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டில் இருந்து ஆடம்பரமான பொருட்களை வாங்கியதாக விசாரணையில் தெரியவந்தது. இதற்காக ஹர்ஷவர்தன், ரஷ்ய ஹேக்கர்களுக்கு 10 டாலர் முதல் 100 டாலர் வரை கொடுத்துள்ளதாகவும் வாக்குமூலத்தில் தெரியவந்து உள்ளது. வெறும் 12ஆம் வகுப்பு மட்டுமே படித்த ஒரு இளைஞர் 40 நாடுகளைச் சேர்ந்த 25,000 பேர்களை ஏமாற்றி ஐந்து கோடிக்கு மேல் மோசடி செய்த சம்பவம் காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

'பாகுபலி' வெப்தொடர்: சிவகாமி வேடத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் இந்த நடிகையா?

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு திரைப்படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் இந்த இரண்டு திரைப்படங்களும் சேர்ந்து

'கைதி ' பட விவகாரத்தில் முழு விபரம் தெரியாமல் செய்தி வெளியிடுவதா? எஸ்.ஆர்.பிரபு ஆதங்கம்

பிரபல தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'கைதி திரைப்படத்தின் கதை ஒரு உண்மையான கைதியின் கதை என்றும்

நடிகர் சாந்தனு மனைவி கீர்த்தியின் அக்கா புகைப்படம்: இணையத்தில் வைரல்!

பிரபல இயக்குனர் கே பாக்யராஜின் மகன் சாந்தனுவின் மனைவி கிகிவிஜய் என்ற கீர்த்தி ஒரு பிரபலமான தொகுப்பாளினி என்பது அனைவரும் அறிந்ததே

அஜித்தின் வலிமை: ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸாகும் முன்பே முடிந்ததா வியாபாரம்?

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் இன்னும் ஒரே ஒரு ஆக்ஷன் காட்சி மட்டும் படமாக்க வேண்டியுள்ளது என்றும்,

அப்போவே எங்க தாத்தா இவ்வளவு சம்பளம் வாங்குனாரு: தியாகராஜ பாகவதர் பேரனின் பேட்டி!

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்கே தியாகராஜ பாகவதர் என்பதும் அவர் நடித்த 'ஹரிதாஸ்' என்ற திரைப்படம் மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக ஒரே திரையரங்கில் ஓடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.