மே மாத மின்சார ரீடிங் எப்படி எடுப்பது? மின்வாரியம் அறிவிப்பு
- IndiaGlitz, [Thursday,May 20 2021]
மே மாதத்திற்கான மின்சார ரீடிங்கை மின் நுகர்வோரே எடுக்கலாம் என மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது முந்தைய மாத கட்டணத்தையே கட்டும்படி மின்சார வாரியம் அறிவுறுத்தி இருந்தது. அதன் பிறகு மொத்தமாக ரீடிங் எடுக்கப்பட்ட போது அதிக கட்டணம் வந்ததாக பலரும் சர்ச்சையில் ஈடுபட்டனர்
இந்த நிலையில் இந்த ஆண்டும் கடந்த ஆண்டை போலவே கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மே மாதத்திற்கான மின்சார ரீடிங் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் முந்தைய மாத கட்டணத்தை கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது
இந்த நிலையில் சற்று முன் மின்சார வாரியம் இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரிடம் மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது. மின் நுகர்வோர்கள் தங்களின் மின்மீட்டரில் உள்ள அளவை புகைப்படமாக எடுத்து அதனை மின்வாரிய உதவி பொறியாளருக்கு அனுப்பி வைத்து அதற்குரிய கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் இந்த அறிவிப்பு எந்த அளவுக்கு நடைமுறையில் ஒத்துவரும் என பொறுத்திருந்து பார்ப்போம்.