To a message he replied with a thumbs-up emoji, now he has to pay Rs 60 lakh
Send us your feedback to audioarticles@vaarta.com
ஸ்மார்ட் போன் பயனாளர்களிடைய எமோஜிக்கள் சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உரையாடலுக்கு நடுவே இந்த எமோஜிக்கள் சந்தோஷம், துக்கம் என்று எல்லாவித உணர்வுகளையும் மிக எளிதாக கடத்தி விடுகின்றன. இதனால் எழுத்துகளை அச்சிட வேண்டிய தேவையும் இல்லாமல் போகிறது. அந்த வகையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரிடமும் எமோஜிகள் பிரபலமாக இருந்து வருகின்றன.
இந்நிலையில் எமோஜியை அர்த்தம் தெரியாமல் பயன்படுத்திய கனட விவசாயி ஒருவருக்கு இந்திய மதிப்பில் 60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கனடாவில் விவசாயம் செய்துவரும் கிறிஸ் ஆக்டர் எனும் விவசாயிடம் ஆளி விதையை வாங்குவதற்காக வாடிக்கையாளர் ஒருவர் முயற்சித்து இருக்கிறார். இதற்காக முதலில் தொலைபேசி வழியாக அந்த வாடிக்கையாளர் தொடர்பு கொண்டு பேசி ஒரு புஷல் (அளவு) 12.73 டாலர் விலைக்கு 86 டன் ஆளி விதைகளை வாங்கிக்கொள்வதாக தெரிவித்துள்ளார். அதையடுத்து நவம்பர் மாதத்தில் ஆளி விதைகளை பெற்றுக் கொள்வதற்கான கொள்முதல் ஒப்பந்தத்தை வாட்ஸ்அப் –இல் அனுப்பி வைத்த அந்த வாடிக்கையாளர் அதை ஆக்டரிடம் சரிபார்க்கவும் சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து வாட்ஸ்அப் செய்திகளை பார்த்த ஆக்டர், வாடிக்கையாளர் அனுப்பிய ஒப்பந்தத்திற்கு நேரடியாக பதிலளிக்காமல் வெறுமனே தம்ஸ்-அப் எமோஜியை மட்டும் பதிலாக அனுப்பியிருக்கிறார். இந்த தம்ஸ்-அப் எமோஜியை பார்த்த வாடிக்கையாளர் ஒப்புதலாக எடுத்துக்கொண்டு ஆளி விதைகளுக்காக காத்திருக்க துவங்கியுள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் ஆளி விதைகள் வாடிக்கையாளரை வந்து அடையவில்லை.
இதையடுத்து ஆக்டரை தொடர்பு கொண்டு பேசிய வாடிக்கையாளர் ஏன் ஆளி விதைகளை வழங்குவதாகக் கூறிவிட்டு அனுப்பிவைக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையில் முடிந்த நிலையில் சஸ்காட்செவான் பகுதியிலுள்ள நீதிமன்றத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி கீன் தலைமையில் இந்த விவகாரம் விசாரணைக்கு வந்த நிலையில் எமோஜிகளை நான் ஒப்புதலாகவோ அல்லது கையொப்பமாகவே நினைத்து அனுப்பவில்லை என்று ஆக்டர் பதிலளித்துள்ளார்.
ஆனால் உண்மை நிலவரப்படி தம்ஸ்-அப் எமோஜி என்பது ஒப்புதல் எனும் பொருளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருவதை உணர்ந்துகொண்ட நீதிபதி கீன் அதுதொடர்பாக எமோஜி டிக்ஷ்னரி.காம்-ஐ பார்த்துவிட்டு தம்ஸ்-அப் எமோஜியை ஒப்புதல் என்னும் பொருளில் மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதையடுத்து கிறிஸ் ஆக்டர் எனும் அந்த விவசாயிக்கு கடன டாலர் மதிப்பில் 61,610 டாலர் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய மதிப்பில் இது 50 லட்சத்து 88 ஆயிரத்து 893 ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே எமோஜி பயன்படுத்தும் நண்பர்களே சரியாக அதன் அர்த்தத்தையும் வடிவத்தையும் தெரிந்து வைத்துக்கொண்டு பயன்படுத்துங்கள்…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments