சிம்புவுடன் இணைந்த சுரேஷ் ரெய்னா

  • IndiaGlitz, [Sunday,August 21 2016]

உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஐபிஎல் போட்டி போலவே தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஆரம்பிக்கப்படுள்ள தமிழ்நாடு பிரிமியர் லீக் (TNPL) போட்டிகள் இன்னும் ஒருசில நாட்களில் தொடங்கவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் எட்டு அணிகளின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
இந்நிலையில் எந்த எட்டு அணிகளில் ஒன்றான மதுரை சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக நடிகர் சிம்பு பாடிய 'ஆட்டைக்கு ரெடியா' என்ற பாடலை சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் சேவாக் வெளியிட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த பாடலின் மியூசிக் வீடியோ நாளை மாலை 4 மணிக்கு சமூக இணையதளத்தில் வெளியாகவுள்ளது. இந்த வீடியோவை பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வெளியிடவுள்ளார். இந்த தகவலை மதுரை சூப்பர் ஜெயண்ட் அணியின் நிர்வாகிகள் சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளனர்.

More News

'பொன்னியின் செல்வன்' நாடகத்தில் கமல்-ரஜினி-அஜித்-விஜய் உண்டா?

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுத்து வரப்படும் நிலையில் நடிகர் சங்கத்திற்கு என புதிய கட்டிடம் கட்டும் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் படத்தில் சமந்தாவுக்கு என்ன கேரக்டர்?

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் வெற்றி படங்களுக்கு பின்னர் மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணி இணையவுள்ளதாகவும், இந்த படத்தின் நாயகியாக சமந்தா நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

நட்டி நட்ராஜின் 'போங்கு' டீசர்

இந்திய திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகிய நட்டி என்ற நட்ராஜ் ஏற்கனவே 'சதுரங்க வேட்டை', 'கதம் கதம்'...

'பாகுபலி 2' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி

எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி உலகையே திரும்பி பார்க்க வைத்தது அனைவரும் அறிந்ததே...

விஜய்சேதுபதியின் தர்மதுரை முதல் நாள் வசூல் நிலவரம்

சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி என ஏற்கனவே இந்த ஆண்டு ஹாட்ரிக் படங்களில் நடித்துள்ள விஜய்சேதுபதி ...