1 பந்துக்கு 18 ரன்களை கொடுத்து மோசமான சாதனை படைத்த சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை சேர்ந்த பந்துவீச்சாளர் ஒருவர் 1 பந்துக்கு 18 ரன்களை கொடுத்து படு மோசமான நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார். இதுகுறித்த தகவல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஜுன் 12 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 8 அணி கொண்ட இந்தப் போட்டித் தொடரில் 13 ஆம் தேதி சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற சேப்பாக்கம் அணி 19 ஓவர்களுக்கு 5 விக்கெட் இழப்பை பெற்று 191 ரன்களை எடுத்த நிலையில் கடைசி ஓவரை சேலம் அணி பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வர் வீசினார். இந்த கடைசி ஓவர்தான் தற்போது மோசமான வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது.
அதாவது அபிஷேக் கடைசி ஓவரில் 1-1, 2-4, 3-0, 4-1 என்று ரன்களை கொடுத்த நிலையில் 5 ஆவது பாலில் எதிரணி வீரர் சசிதேவ்வின் விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால் அது நோ பால் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் நோ பாலுக்கு அபிஷேக் ரீ பால் வீசி ஒரு ரன்னை கொடுத்தார். இதைத் தொடர்ந்து 6 ஆவது பாலை அபிஷேக் வீசி சஞ்சய் யாதவ்வின் விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால் துருதிஷ்டவசமாக அதுவும் நோ பால் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நோ பாலுக்கு ரீ பாலை அபிஷேக் வீசினார். அதில் பேட்ஸ்மேன் சிக்ஸர் அடித்த நிலையில் நோ பால் என்று அறிவிக்கப்பட்டு 6+1 ஆனது. இதனால் நோ பாலுக்கு ரீ பாலை மீண்டும் அபிஷேக் வீசினார். இந்த முறை 2 ரன்களை எடுத்த நிலையில் அதுவும் நோ பால் என்று அறிவிக்கப்பட்டு 2+1 ஆனது. தொடர்ந்து நோ பாலுக்கு அபிஷேக் ரீ பால் வீசினார். அது வைட் என்று அறிவிக்கப்பட்டு 1 ரன் கொடுக்கப்பட்டது. தற்போது வைட்டுக்கு ரீ பாலை அபிஷேக் சரியாக வீசுகிறார். இந்த முறை பேட்ஸ்மேன் சிக்ஸர் அடித்தார். இப்படி கடைசி பந்துக்கு மட்டும் அபிஷேக் 18 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.
மேலும் அந்த ஓரு ஓவருக்கு 26 ரன்கள் கொடுத்த அவர் மொத்தமாக மேட்சில் அவர் வீசிய 4 ஓவருக்கு 44 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். இதையடுத்து சேப்பாக்கம் அணி 218 ரன்கள் என இலக்கு நிர்ணயித்தது. ஆனால் சேலம் அணி வீரர்கள் 165 ரன்களை மட்டுமே எடுத்து 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றனர்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் ஒரு பந்துக்கு 18 ரன்களை விட்டுகொடுத்த இந்தத் தகவல் தற்போது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக மாறியிருக்கிறது.
The most expensive final delivery in history - 18 runs from the last ball of the 20th over. pic.twitter.com/rf8b0wMhOw
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 13, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com