2015க்கு பின் இப்போதுதான்: தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பால் சென்னை மக்கள் மகிழ்ச்சி 

  • IndiaGlitz, [Monday,December 02 2019]

கடந்த 2015ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்த ஆண்டு தான் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகள் அனைத்தும் நிரம்பி உள்ளதாகவும், வரும் 2020ஆம் ஆண்டு சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறை இருக்காது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளது சென்னை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

அடுத்த ஆண்டு சென்னைவாசிகளுக்கு குடிநீர் பிரச்னை ஏற்படாது. ஏனெனில் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. அதாவது

பூண்டி (35% நிரம்பியுள்ளது) - 3000 கன அடி நீர்
புழல் (55% நிரம்பியுள்ளது) - 2200 கன அடி நீர்
செம்பரம்பாக்கம் (25% நிரம்பியுள்ளது) 2000 கன அடி நீர்
வீராணம் (நிரம்பி வழிகிறது) - 5700 கனஅடி நீர்
சோழவரம் (12% நிரம்பியுள்ளது) - 500 கன அடி நீர்

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 31ம் தேதி சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக இருக்கும் ஏரிகளில் ஒட்டுமொத்தமாக 6500 - 7000 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தால் சென்னை மக்களின் தேவைக்கு போதுமானதாக இருக்கும். இந்த நிலையில், டிசம்பர் 2அம் தேதியே இந்த 5 ஏரிகளிலும் 5200 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதுமட்டுமின்றி இன்றும், நாளையும் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதுடன், கிருஷ்ணா நதிநீர் வரத்தும் இதனுடன் சேர்ந்தால் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஐந்து ஏரிகளில் 6500 - 7000 மில்லியன் கன அடி நீர் இருப்பை அடைந்து விடும்.

எனவே 2015ம் ஆண்டுக்குப் பிறகு சென்னை மக்களுக்கு தேவையான நீர் கையிருப்பு உள்ளதால் 2020ஆம் ஆண்டு சென்னை மக்களின் குடிநீருக்கு பிரச்சனை இருக்காது’ என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
 

More News

நிர்வாண வீடியோ அனுப்பிய காதலி: ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து கம்பி எண்ணும் காதலன்:

நிர்வாண நிலையில் இருக்கும் வீடியோ மற்றும் குளிக்கும் போது எடுத்த வீடியோக்களை காதலன் வற்புறுத்தியதால் காதலி அனுப்பிய நிலையில் அந்த வீடியோக்களை காதலன் ஃபேஸ்புக்கில் ஷேர்

சொந்தத்தீவு, இனி தனி நாடு. 6 டன் தங்க நகைகளோடு செட்டில் ஆன நித்தியானந்தா..!

தனித்தீவை சொந்தமாக வாங்கினாலும் அந்தத் தீவு மற்றொரு நாட்டின் கட்டுப்பாட்டில் தான் தற்போதுவரை இருக்கிறது. அந்தத் தீவை தனிநாடாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்

40%-க்கு மேல் உயர்கின்றன செல்போன் கட்டணங்கள்..!

அன்லிமிட்டெட் அழைப்புகளை மாத கட்டணத்திற்கு இலவசமாக அளித்து வந்த ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தற்போது அதற்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன

அசுரன் மஞ்சு வாரியார் மிரட்டிய ப்ரதி பூவான்கோழி. மலையாள டீசர்

அசுரன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தவர் மஞ்சு வாரியார். இவர் புதிதாக நடித்துள்ள ப்ரதி பூவான்கோழி என்ற மலையாள படத்தின் டீசர் நேற்று வெளியாகி

நடிகர் விவேக்கிற்கு கிடைத்த விலைமதிப்பில்லா பரிசு!

இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கிய 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திரைப்படத்தில் கடந்த 1987ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர் நடிகர் விவேக். அதன்பின் கே.பாலச்சந்தர்