2015க்கு பின் இப்போதுதான்: தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பால் சென்னை மக்கள் மகிழ்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2015ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்த ஆண்டு தான் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகள் அனைத்தும் நிரம்பி உள்ளதாகவும், வரும் 2020ஆம் ஆண்டு சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறை இருக்காது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளது சென்னை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
அடுத்த ஆண்டு சென்னைவாசிகளுக்கு குடிநீர் பிரச்னை ஏற்படாது. ஏனெனில் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. அதாவது
பூண்டி (35% நிரம்பியுள்ளது) - 3000 கன அடி நீர்
புழல் (55% நிரம்பியுள்ளது) - 2200 கன அடி நீர்
செம்பரம்பாக்கம் (25% நிரம்பியுள்ளது) 2000 கன அடி நீர்
வீராணம் (நிரம்பி வழிகிறது) - 5700 கனஅடி நீர்
சோழவரம் (12% நிரம்பியுள்ளது) - 500 கன அடி நீர்
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 31ம் தேதி சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக இருக்கும் ஏரிகளில் ஒட்டுமொத்தமாக 6500 - 7000 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தால் சென்னை மக்களின் தேவைக்கு போதுமானதாக இருக்கும். இந்த நிலையில், டிசம்பர் 2அம் தேதியே இந்த 5 ஏரிகளிலும் 5200 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதுமட்டுமின்றி இன்றும், நாளையும் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதுடன், கிருஷ்ணா நதிநீர் வரத்தும் இதனுடன் சேர்ந்தால் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஐந்து ஏரிகளில் 6500 - 7000 மில்லியன் கன அடி நீர் இருப்பை அடைந்து விடும்.
எனவே 2015ம் ஆண்டுக்குப் பிறகு சென்னை மக்களுக்கு தேவையான நீர் கையிருப்பு உள்ளதால் 2020ஆம் ஆண்டு சென்னை மக்களின் குடிநீருக்கு பிரச்சனை இருக்காது’ என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments