கொரோனா எதிரொலி: எல்லையை இழுத்து மூடிய தமிழக கிராமம்

கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க ஒவ்வொருவரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு தீவிரமாக வலியுறுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள ஒரு கிராமமே தன்னை தனிமைப்படுத்தி கொள்வது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க தங்களுடைய கிராமத்திற்கு வெளியாட்களுக்கு அனுமதி இல்லை என கல்லக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கீழப்பட்டி என்ற கிராமத்தின் மக்கள் அதிரடியாக முடிவு எடுத்துள்ளனர்.

இதனை அடுத்து சங்கராபுரம் கிராமத்தின் எல்லையில் வேலி போட்டு வெளியாட்கள் யாரும் வராமல் தடுப்பதோடு அங்கு இரவு பகலாக சிலர் காவலுக்கும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவில் இருந்து பாதுகாக்க இந்த கிராமத்தை சேர்ந்தவர்களின் அதிரடி நடவடிக்கையை பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

அணுவை விடவும் சிறியது, அணுகுண்டை போல் கொடியது: வைரமுத்துவின் கொரோனா பாடல்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பாடல் ஒன்றை கவியரசு வைரமுத்து எழுதியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு எதிரொலி: மீண்டும் ராமாயணத்தை ஒளிபரப்பும் தூர்தர்ஷன்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர்.

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா? ஊரடங்கையும் மீறி பரவும் வைரஸ்

கொரோனா வைரஸ் தமிழகத்தில் மிக தீவிரமாக பரவி வருவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அந்த உத்தரவையும் கடுமையாக கடைபிடிக்க வேண்டும்

33 கோடி கொரோனா நிவாரண நிதி கொடுத்த சிஆர்பிஎஃப் வீரர்கள்

நாடு முழுவதும் கொரோனா பயத்தில் தற்போது இருக்கும் நிலையில், கொரோனா வைரசில் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது

வீர இளைஞருக்கு கொரோனாவை கண்ணில் காட்டிய போலீஸ்

கொரோனா வைரஸ் பீதி காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஊரடங்கு உத்தரவையும் மீறி ஒரு சிலர் சாலைகளில் காரணம் இன்றி சுற்றித் திரிகின்றனர்