மார்ச் 1 முதல் வெளிநாட்டு பானங்கள் விற்பனை இல்லை. தமிழ்நாடு வணிகர் சங்கம் அதிரடி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜல்லிக்கட்டு தடையை தகர்க்க லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் ஜல்லிக்கட்டு தடைக்கான வெற்றியை மட்டும் பெற்றுத்தரவில்லை. பல விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்த செய்துள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் போட்ட கோஷங்களில் முக்கியமானது பீட்டா அமைப்புக்கு தடை, வெளிநாட்டு குளிர்பானங்களை தவிர்ப்பது ஆகியவையும் இருந்தது. இந்த போராட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த மக்களை பெரிதும் ஈர்த்தது வெளிநாட்டு பானங்களை தவிர்ப்பது என்ற கோஷம்தான் என்பதில் சந்தேகம் இல்லை.
ஏற்கனவே ஒருசில திரையரங்குகள், வணிக வளாகங்களில் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்வதில்லை என்று சம்பந்தப்பட்ட உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் வெளிநாட்டு பானங்கள் விற்பனை இல்லை என தமிழ்நாடு வணிகர் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா, விழுப்புரத்தில் இன்று மதியம் நிருபர்களிடம் பேசியபோது, வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனையை மார்ச் 1ம் தேதி முதல் நிறுத்த உள்ளோம். உள்நாட்டு குளிர்பானங்கள் விற்பனையை ஊக்குவிப்போம் என்று கூறியுள்ளார்.
மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த போனஸ் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments