பாமக மட்டுமல்ல.. பட்டியல், பழங்குடி இனத்தவருக்கும் இடஒதுக்கீடு… முதல்வரின் தொலைநோக்கு திட்டம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் விதிமுறைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து, அதன் அறிக்கைகளை எடுத்துரைக்கும் வகையில் பிரத்தியேகமாக ஒரு ஆணையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இதனால் அதிமுகவுடன் கூட்டணிக் கட்சியாக இருந்து வரும் பாமக நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வரும் 20% இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு ஒரு முடிவு எட்டப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.
தமிழகத்தில் 25% வன்னியர்கள் உள்ளனர் என அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து கூறிவருகிறார். இந்நிலையில் தமிழக முதல்வர் சாதி வாரியான புள்ளி விவரங்களை சேரிக்கும் ஆணையத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்து உள்ளார். இந்த ஆணையத்தின் முடிவின்படியே தமிழகத்தில் சாதி வாரி சலுகைகள் வழங்கப்படும் எனவும் கருத்துக் கூறப்படுகிறது.
மேலும் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டு வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கினை எதிர்க்கொள்ள சாதி வாரியான புள்ளி விவரம் சேகரிக்கும் புதிய ஆணையம் உதவியாக இருக்கும் எனவும் முதல்வர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கைகளினால் இனி தமிழகத்தில் பட்டியல் இனத்தவர்களுக்கும், பட்டியல் பழங்குடி இனத்தவர்களுக்கும் கோரிக்கை வைக்காமலே இடஒதுக்கீடு கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
முன்னதாக தமிழகத்தின் இடஒதுக்கீட்டு முறையில் இருந்து வந்த அனைத்து குழப்பங்களுக்கும் ஒரு நிரந்தரத் தீர்வு காணப்படும். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சாதி வாரியான புள்ளி விவரங்களையும் சேகரிக்கும் வகையில் புதிய ஆணையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout