'பாகுபலி 2' படத்தின் தமிழக உரிமையின் வியாபாரம்

  • IndiaGlitz, [Friday,January 27 2017]

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமான எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் வசூல் உலகம் முழுவதும் சுமார் ரூ.650 கோடி வசூல் செய்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'பாகுபலி 2' ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரம் தற்போது தொடங்கிவிட்டது. குறிப்பாக இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பு உரிமையை ஸ்ரீக்ரீன் புரடொக்ஷன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து பெற்றுள்ளதாகவும், இந்த தொகை ரஜினி படத்தை அடுத்த பெரிய தொகை என்றும் கூறப்படுகிறது. இதே நிறுவனம்தான் இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தை ரிலீஸ் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
'பாகுபலி 2' திரைப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ராணா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். 'பாகுபலி'யை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற மர்மத்தை தெரிந்து கொள்ள இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே உள்ளது.