தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம்: தியேட்டர் அதிபர்கள் எடுத்த அதிரடி முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் புதிய படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு, க்யூப் மற்றும் யுஎஃப்ஓ உள்ளிட்ட டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்கள் திரைத்துறையினரிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை அடுத்து மார்ச் 1 முதல் புதிய படங்களை வெளியிடாமல் தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் செய்து வருகிறது.
இதுகுறித்து இரு தரப்பினர்களும் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததை அடுத்து வேலைநிறுத்தம் தொடர்கிறது. புதிய திரைப்படங்கள் வெளியிடாததன் காரணமாக தமிழகம் முழுவதும் திரையரங்க உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருசில நாட்கள் வேலைநிறுத்தம் என்றால் பழைய படங்களை போட்டு சமாளிக்கலாம், ஆனால் வேலைநிறுத்தம் தொடர்ந்தால் திரையரங்குகளை இழுத்து மூடுவதை தவிர வேறு வழியில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் இன்று கூடிய திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டத்தில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் தியேட்டர்களை மூட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதற்குள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வேலைநிறுத்தம் கைவிடப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments