திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம்: தமிழக அரசின் புதிய அரசாணை
- IndiaGlitz, [Tuesday,December 05 2017]
தமிழக திரையரங்குகளில் கிட்டத்தட்ட ஒரு டிக்கெட்டின் அளவிற்கு பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யப்பட்டது.. குறிப்பாக ஒருசில மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மணிகணக்கில் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்த நிலையும் இருந்து வந்தது.
இந்த நிலையில் இன்று திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய வேண்டிய தொகை குறித்து தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
*மாநகராட்சிகள், சிறப்பு நிலை நகராட்சிகள்: கார், ஆட்டோவிற்கு ரூ.20ம், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10ம் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய வேண்டும்
*நகராட்சி: கார், ஆட்டோவிற்கு ரூ.15ம், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.7ம் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய வேண்டும்
*நகர, கிராம பஞ்சாயத்து: கார், ஆட்டோவிற்கு ரூ.5ம், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.3ம் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய வேண்டும்
மேற்கண்ட அரசாணையின்படி திரையரங்கு உரிமையாளர்கள் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்கின்றார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்