வேலைநிறுத்தம் குறித்து முக்கிய முடிவு எடுத்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்
- IndiaGlitz, [Tuesday,May 16 2017]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற நடிகர் விஷால் சமீபத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகள் வைத்தார். இந்த கோரிக்கைகள் குறித்து விஷால் தலைமையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை திரையுலகினர் சந்தித்தனர்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஜூன் 1 முதல் ஒட்டுமொத்தமாக அனைத்து திரைத்துறையினர்களும் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், இந்த வேலைநிறுத்தம் காரணமாக படவேலைகள், ரிலீஸ் , படப்பிடிப்பு எடிட்டிங், டப்பிங், மிக்சிங் என எந்த போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் இருக்காது என்றும் அவர் அறிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் திரையரங்குகளும் மூட திரையரங்கு உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் விஷாலின் இந்த போராட்ட அறிவிப்புக்கு ஒத்துழைப்பு இல்லை என திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் சங்கம் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து கூட்டாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகிஸ்தர்கள் கூட்டமைப்பும் இணைந்து வெளியிடும் கூட்டறிக்கை என்னவென்றால், வருகின்ற 30.05.2017 அன்று வழக்கம் போல தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இயங்கும். வழக்கம்போல திரைப்பட காட்சிகள் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்'.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதேபோல் மேலும் ஒருசில சங்கங்களும் வேலைநிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது.